ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவாவின் கார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்வடாரில் டீசல் விலை உயர்வை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கனார் மாகாணத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்த நோபோவா காரில் தலைநகர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் கற்களை குவித்து அவரை மக்கள் முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து கார் நிற்காமல் சென்றதால் கற்களால் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.