நீலகிரி வரையாடுகள் தினத்தை ஒட்டி உதகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
நீலகிரி வரையாடுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஏ.ஆர்.சி டேவிதாரின் பிறந்தநாளான அக்டோபர் 7ம் தேதி, ஆண்டுதோறும் நீலகிரி வரையாடு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நீலகிரி வரையாடுகள் தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரையாடுகள் பாதுகாப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட வன அலுவலர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வன அலுவலர் கௌதம், சோலை புல்வெளிகள் அதிகரித்து வருவதால் தற்போது வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.