தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மழை பெய்ய வேண்டி வைகை ஆற்றங்கரையில் மலை கிராம மக்கள் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வருசநாடு வனப்பகுதியில் போதிய மழையில்லாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மழை பெய்ய வேண்டி மூல வைகை ஆற்றங்கரையில் உள்ள கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோயிலில் மக்கள் பொங்கல் வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.