சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள ஆனைவாரி முட்டல் அருவிக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆனைவாரி முட்டல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.