நேபாளத்தில் நடந்த போராட்டத்தின்போது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜென் சி தலைமுறையினர் மேற்கொண்ட பேரணி வன்முறையாக வெடித்தது.
இதனையடுத்து கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகினர்.
கே.பி.ஒலி சர்மா அரசு கவிழ்ந்ததை அடுத்து ஜென் சி தலைமுறையினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்னாள் பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேபாள் போலீசார் தெரிவித்துள்ளனர்.