இந்தியா புறப்பட்டபோது பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் காக்பிட்டிலிருந்து உடன் பயணித்தவர்களிடம் உரையாற்றிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
அரசு முறை பயணமாகப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ளார். இதற்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன், அவர் தன்னுடன் பயணித்தவர்களுடன் விமானத்தின் காக்பீட்டிலிருந்து உரையாற்றினார்.
அப்போது உங்கள் அனைவருடன் விமானத்தில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் இது இங்கிலாந்து, இந்தியாவிற்கு செல்லும் இதுவரை இல்லாத மிகப்பெரிய வர்த்தகக் குழு என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள, உங்களுடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர் தனது குழுவுடன் புறப்பட்ட மற்றும் உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பேசு பொருளாகியுள்ளது.