கரூர் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார்.
கரூரில் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு மினிவேன் ஆலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
புலியூர் பகுதியில் வந்தபோது வாகனத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது.
இதில் சித்ராதேவி என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 6 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.