உத்தராகண்டில் அனைத்து சிறுபான்மையின மக்களும் பயன்பெறும் வகையிலான “சிறுபான்மையினர் கல்வி 2025” மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் பள்ளிகள் மதரசா வாரிய சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற முடியும் என்பதால் கிறிஸ்துவர்கள், சீக்கியர், பார்சி உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களால், அரசு வழங்கும் சலுகையைப் பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மதரசா வாரிய சட்டத்துக்கு மாற்றாக, அனைத்து சிறுபான்மையின மக்களும் பயன்பெறும் வகையில் உத்தராகண்ட் சிறுபான்மையினர் கல்வி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.