மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே பாலம் இல்லாததால் மக்கள் நீரில் இறங்கி ஆற்றைக் கடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
தொடர்மழையால் ஜல்பைகுரியில் உள்ள கதியா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பமண்டங்கா, டோண்டு மற்றும் கெர்கட்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.
மேலும் அந்தப் பகுதியல் பாலம் அமைக்கப்படாததாலும், வழக்கமாக இயக்கப்படும் பரிசல்கள் இயங்காததால் மக்கள் பணிக்குக் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்ல மக்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.