சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்து புதிய உச்சமாகச் சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
அந்த வகையில் காலை மற்றும் பிற்பகல் என இருமுறை மொத்தம் ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 185 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர வரக்கத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.