மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கும், நேற்று இயற்பியலுக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதில் ஜப்பானை சேர்ந்த சுசுமா கிடகவா, இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், ஜோர்டானை சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
உலோக – கரிம கட்டமைப்பை உருவாக்கியதில் இவர்கள் அளித்த பங்களிப்புக்காக இந்த மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோபல் பரிசு பெரும் இந்த 3 விஞ்ஞானிகளுக்கும் உலக மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.