தமிழ்நாடு வளர்ச்சி மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, தேசிய வளர்ச்சிக்கும் முக்கியமான ஒன்று என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் NIRF – 2025 தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்குப் பாராட்டு விழா மற்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்புகுறித்த சொல்லரங்கம் நடைபெற்றது.
இதில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் சிறப்பான இடங்களைப் பெற்ற கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள் மற்றும் துணைவேந்தர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நமது மாநிலம் மொத்த சேர்க்கை விகிதத்தில் 50 சதவீதத்தை கடந்துள்ளதாகக் கூறினார்.
தேசிய இலக்கு 2035 ஐ அடைவதற்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் நம் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். தமிழ்நாடு வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, தேசிய வளர்ச்சிக்கும் முக்கியமான ஒன்று எனவும் கூறினார்.