இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்க உள்ளார். அப்பாது வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தொடர்ச்சியாக இரு தலைவர்களும், தொழில்துறைத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளனர். அப்போது இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,பிரிட்டனில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வர்த்தகக் குழுவுடன், இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள, பிரதமர் கெயர் ஸ்டார்மரை வரவேற்பதாக பதிவிட்டுள்ளா. இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இன்றைய சந்திப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.