24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனையில் ஒரே ஒரு ஸ்ட்ரெட்சர் மட்டுமே இருப்பதால், கால் உடைந்து சிகிச்சைக்கு வந்த நபரை உறவினர்கள் தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், மருத்துவமனையில் போதுமான கருவிகளும், மருத்துவர்களும் இல்லாததால் பொதுமக்கள் சிகிச்சை பெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும், இதனால் மேல் சிகிச்சைக்கு வழக்கம்போல் வேலூர் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
எனவே போதுமான மருத்துவ கருவிகளை வாங்க வேண்டும் என்றும் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.