தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக திடீரென பெய்த மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. செம்மங்குடி கன்னி வாய்க்கால் முறையாக தூர் வாரப்படாததால் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், 6 மாதங்களுக்கு முன்பே வாய்க்காலை தூர்வார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.