ZOHO இமெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பை தொடர்ந்து ZOHO நிறுவனத்தின் மீது இந்தியர்களின் கவனம் திரும்பி உள்ளது. அந்த நிறுவனத்தின் ZOHO இமெயில், அரட்டை செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ZOHO இமெயிலுக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், எனது புதிய இமெயில் முகவரி amitshah.bjp@zohomail.in எனவும், எதிர்காலங்களில் தகவல் பரிமாற்றத்துக்கு இந்த முகவரியை பயன்படுத்துங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், எங்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோஹோவில் கடுமையாக உழைத்த எங்கள் கடின உழைப்பாளி பொறியாளர்களுக்கு இந்த தருணத்தை அர்ப்பணிக்கிறேன் என கூறியுள்ளார்.
அவர்கள் அனைவரும் இந்தியாவில் தங்கி இத்தனை ஆண்டுகள் உழைத்தார்கள், அவர்களின் நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் வேம்பு கூறியுள்ளார்.