உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை கட்டணம் இல்லாமல் ஆன்லைனில் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணத் தேதியை மாற்ற விரும்புவோர், டிக்கெட்டை ரத்து செய்து புதிதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் பயணிகளுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படுவதால் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வந்தது.
இதுகுறித்து பேசியுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படுவதாக தெரிவித்தார்.
















