திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி எடையளவை கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் சீர்திருத்தம் செய்து, அதை 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டு கட்டமைப்புகளாக எளிமைப்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள் 12 சதவீதத்தில் இருந்து வரி இல்லாமலும் அல்லது 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே இது போன்று திருத்தப்பட்ட முத்திரையிட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் திருத்தப்பட்ட விலை விவரங்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், வியாபாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.