ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ultimate Fighting Championship மற்றும் Mixed martial arts போட்டிகளில் எதிரிகளைப் பந்தாடி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுமன் மொக்தாரியன்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுமனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
சிவப்பு நிற ஆடி காரில் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 2 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் Mixed martial arts போட்டி நடைபெற இருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சுமன் உயிர்தப்பினார். இரு சம்பவங்களின் அடிப்படையில் கொலை வழக்குப் பதிவு செய்து சிட்னி போலீசார் விசாரித்து வருகின்றனர்.