கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை படைத்துள்ளது தெரியவந்துள்ளது.
உலகம் முழுதும் கிரிப்டோகரன்சி என்படும் மெய்நிகர் நாணயம் பயன்பாடு அதிகரித்துள்ளது. வட கொரியா கிரிப்டோ திருட்டில் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை, 30க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை லாசரஸ் குழு நடத்தியுள்ளது.
அவர்கள் திருடிய கிரிப்டோகரன்சியின் மதிப்பு, 16 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டு திருடப்பட்ட 5 ஆயிரத்து 535 கோடி ரூபாயை விட மூன்று மடங்கு அதிகமாகும்.