நீலகிரி மாவட்டம் பகல் கோடு மந்து பகுதியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தோடர் எருமைப்பால் மதிப்புக் கூட்டு மையத்தினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ திறந்து வைத்தார்.
தோடர் பழங்குடியினர் எருமைகளை புனிதமாகவும், தங்கத்தை விட விலைமதிப்பானதாகவும் கருதுகின்றனர். குறிப்பாகத் திருமணங்களில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு எருமையை சீதனமாகத் தருகின்றனர்.
தனித்துவமான இந்த எருமைகள் தற்போது குறைந்து வரும் நிலையில் தோடர் பழங்குடியின மக்கள், எருமைகளை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் எருமைப்பால் மதிப்புக் கூட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.