ஜான்சன் & ஜான்சன் பவுடர் காரணமாகப் பெண் உயிரிழந்த வழக்கில் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்சியில் தொடங்கப்பட்டது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம். உலகம் முழுவதும் கிளைகளை பரப்பியுள்ள இந்நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பு, சோப், மசாஜ் ஆயில் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து தாய்மார்களின் ஆதரவை பெற்றது.
இந்நிலையில் மே மூர் என்ற பெண்ணின் குடும்பத்தினர் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
டால்க் அடிப்படையிலான பேபி பவுடரில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் காரணமாக மே மூருக்கு மெசோதெலியோமா என்ற அரிய வகை புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 8 ஆயிரத்து 576 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.