தருமபுரியில் மாரடைப்பால் உயிரிழந்த மூதாட்டியின் முழு உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
சோகத்தூர் அருகேயுள்ள ஏ-ரெட்டி அள்ளிக் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மனைவி சத்தியவாணி, உடல் நலக்குறைவால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாரடைப்பு காரணமாக 7ம் தேதி காலமானார், இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் சத்தியவாணியின் முழு உடலையும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காகத் தானமாக வழங்கினர்.