சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் மோதியதில் வடமாநில இளைஞர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தண்டியில் சாலையைக் கடப்பதற்காகச் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுபாடற்ற வகையில் அதிவேகமாக வந்த சொகுசு காரைக் கண்டு சாலையோரம் நின்றவர்கள் விலகினர்.
எனினும் கார் மோதியதில் வடமாநில இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரைத் துரத்திப்பிடித்த பொதுக்கள், மதுபோதையில் இருந்த ஓட்டுநரை பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.