ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுக் கண்டுபிடிப்பு.
கட்டுகுடி கிராமத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அந்தக் கல்வெட்டானது கி.பி. 1657 ஆம் ஆண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு என்றும், ரெகுநாத திருமலை சேதுபதி காத்த தேவர் காலத்து நில தானத்தைப் பற்றிய அரிய தகவல்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அந்தக் கல்வெட்டில் மன்னர் அளித்த தானத்திற்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.