முதல்முறையாகக் கோவில்பட்டியில் நின்று சென்ற சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு அதிமுக மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென் மாவட்டங்களில் அதிக வருவாய் ஈட்டி தரும் ரயில் நிலையமாகக் கோவில்பட்டி ரயில் நிலையம் விளங்கி வரும் நிலையில், சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே, சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் எனச் சில நாட்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, முதல்முறையாகக் கோவில்பட்டி ரயில் நிலையம் நின்று சென்ற சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு அதிமுக, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லோகோ பைலட்டுக்கு சால்வை அணிவித்தும், கடலை மிட்டாய் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.