நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இரவோடு இரவாகச் சுடுகாட்டை ஜேசிபி மூலம் தோண்டியதாக 15வது வார்டு திமுக கவுன்சிலர் கணபதி மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சுடுகாட்டை தோண்டியதால் எலும்புக் கூடுகள் வெளியில் தெரிவதாகக் கூறிய பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தையும், காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
திமுக கவுன்சிலர்மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.