மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை போல் 10 பெண்களை ஏமாற்றியுள்ளாரென கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், தன்னைப் போல் 10 பெண்களை அவர் ஏமாற்றியுள்ளார் என்றும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்கள் அனைவரும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளிக்க தயாராக இருப்பதாகவும், உரிய ஆவணங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளதாகவும் ஜாய் கிரிஸில்டா தரப்பில் கூறப்பட்டுள்ளது.