திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கியுள்ள நிலையில், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுஒருபுறமிருக்கு கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் புகையான் நோய் தாக்குதலால ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.