கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உரிய அனுமதியின்றி ரேபிடோ மூலம் வாடகைக்கு இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் பொறி வைத்துப் பிடித்தனர்.
ஓசூரில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தக் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், அனுமதியின்றி சில வாகன ஓட்டிகள் ரேபிடோ மூலம் பைக் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள், ரேபிடோ வாடிக்கையாளர் போல் செயல்பட்டு, அந்த வாகனங்களை பிடித்தனர்.
பின்னர் அந்த வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அதிகாரிகள் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.