விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனக் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குத் தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது தனக்கு பிடித்தது எனக் கூறிய சிவராஜ்குமார், விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்பதாகவும் கூறினார்.
மேலும், கரூர் நெரிசலில் 41 உயிர் பறிபோனது கஷ்டமாக இருந்தது எனக் கூறிய சிவராஜ்குமார், விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.