அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெக்சாஸைச் சேர்ந்தவர் வீடியோ கேம் பிரபலம் FANDY. இவருக்குச் சமீபத்தில் இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.
வீட்டிலேயே குழந்தை பிறந்த நிலையில், FANDY தனது பிரசவத்தை எக்ஸ் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்துள்ளார்.
குழந்தை பிறந்ததற்காக FANDY-க்கு வாழ்த்துகள் குவிந்தாலும், பிரசவம் நடந்ததை லைவ் செய்ததற்கு ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் தளத்தில் சிலர், இது போன்ற நிகழ்வுகளைப் பகிர்ந்ததற்காக அறையில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
மற்றொருவர், வீட்டு பிரசவத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது பைத்தியக்காரத்தனம் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள FANDY, பணத்திற்காக இவ்வாறு செய்யவில்லையெனத் தெரிவித்துள்ளார்.