சபரிமலை தங்க தகடு விவகாரத்தால் கேரள சட்டமன்றம் முடங்கியதோடு பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அம்மாநில பாஜகவினர், கோழிக்கோட்டில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
மேலும் பாலக்காட்டிலும் பாஜகவினரின் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு, பலரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அமைச்சர் வாசவன் பதவி விலகக் கோரி சட்டமன்ற கூட்டத்திலும் அமளி ஏற்பட்டது. இதனால் கேரள சட்டமன்றம் தொடர்ந்து நான்காவது நாளாக முடங்கியது. மேலும், அவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
















