உடைந்துபோன பட்டாம் பூச்சியின் சிறகை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூயார்க் அருகே உள்ள லாங் தீவில் ஸ்வீட் பிரையர் இயற்கை மைய ஊழியர்கள், காயமடைந்த மோனார்க் பட்டாம் பூச்சி ஒன்றை மீட்டனர்.
ஒருபக்க சிறகு உடைந்ததால் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அந்தப் பட்டாம்பூச்சி.
இந்நிலையில் ஏற்கனவே இறந்துபோன பட்டாம்பூச்சியின் சிறகை எடுத்துக் காயமடைந்த பட்டாம்பூச்சிக்கு பொருத்தும் சிகிச்சையை இயற்கை மைய ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அதன் பலனாக மோனார்க் பட்டாம்பூச்சி, தனது இரு சிறகுகளையும் விரித்து உற்சாகமாகப் பறந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.