பிறவியில் இருந்தே நிறக்குருடு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், சிறப்புக் கண்ணாடி மூலம் நிறங்களை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது.
கண்களின் விழித்திரையில் உள்ள சிறப்பு செல்களான கூம்பு செல்கள், நிறங்களை பிரித்தறிய உதவுகின்றன. இந்தக் கூம்பு செல்களில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது அவை இல்லாத நிலையே நிறக்குருடுக்கு முக்கிய காரணமாகும்.
இந்தப் பிரச்னையால் வண்ணங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படும். அந்த வகையில் 66 வயதான நபருக்குப் பிறவியில் இருந்தே நிறக்குருடு பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் அவரது பிறந்த நாளை ஒட்டி, குடும்பத்தினர் சிறப்பு கண்ணாடி ஒன்றை பரிசளித்தனர்.
அதனை அணிந்தவுடன் முதியவரின் முகத்தில் புத்துணர்ச்சி தோன்றியது. 66 ஆண்டுகளில் முதல் முறையாக நிறங்களைப் பார்த்ததும் அவரது செயலில் குழந்தையின் உற்சாகம் குடிகொண்டது. (ப்ரீத்) இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















