ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வாரக் கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார். 2021 ஆகஸ்டில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை. இதுவரை தாலிபான்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரே நாடு ரஷியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
















