மேற்குவங்க மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஜிப்லைன் மூலம் சென்ற மருத்துவருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
கனமழை காரணமாக டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள், நீர்சூழ்ந்த பகுதியில் சிக்கி இருந்ததால் இர்பானால் அங்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து கயிறுமூலம் ஜிப்லைன் போல அமைத்துக் கிராமத்திற்கு சென்ற இர்பான், காயமடைந்த மக்களுக்கு உனடியாகச் சிகிச்சை அளித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மருத்துவர் இர்பானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
















