ஜப்பானில் சாலையில் நடந்து சென்ற பெண்ணைக் கரடி தாக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அகிடா மாகாணத்தில் உள்ள டெய்சன் பகுதியில் பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வேகமாக ஓடி வந்த கரடி, பெண்ணைத் தாக்க முயன்றது.
ஆனால், சில நொடிகளிலேயே அந்தக் கரடி அங்கிருந்து தப்பியோடியது. பின்னர் அவ்வழியே காரில் வந்தவர், பெண்ணை காரில் அழைத்துச் சென்றார்.