மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மதுரை சிந்தாமணி அருகே தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதான திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர், கார் மூலம் சிந்தாமணி பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார். இந்நிலையில், முதல் முறையாக மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தோனிக்கு அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர்.