பீகார் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதியும், 122 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது.
பதிவான வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 121 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.