காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என திமுக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முன்னிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.