சிட்னியில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடற்படை தளத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸை சந்தித்து பேசினார்.
அப்போது, இருவர் முன்னிலையில் இருநாட்டு ராணுவப் படைகளும் இணைந்து செயல்படுவதை வலுப்படுத்தும் விதமாக, பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனை தொடர்ந்து, 2ஆம் நாள் நிகழ்ச்சியாக, சிட்னியின் பாட்ஸ் பாயிண்ட் பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய கடற்படை தளத்திற்கு ராஜ்நாத் சிங் சென்றார். அப்போது, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பீட்டர் கலீல் அவரை வரவேற்றார். பின்னர், இருவர் படகில் சென்று கடற்படை தளத்தை பார்வையிட்டனர்.