பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மின்டானோவ் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 புள்ளி 6ஆக பதிவான நிலநடுக்கம், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து கொண்டு வெளியேறினர்.
கடந்த 1ம் தேதி விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது ஒரே மாதத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.