சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
சீனாவில் இலையுதிர் கால விழாவை ஒட்டி ஆண்டுதோறும் 8 நாட்கள் பொது விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விடுமுறையை ஒட்டி லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். பொது விடுமுறை முடிந்து சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் திரும்பினர். இதனால் சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் உள்ள 36 பாதைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.