சமயபுரம் அருகே 10 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைதான வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சவுகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல நகை கடை ஊழியர்கள் குணவந்த், மகேஷ் ஆகியோர் 10 கிலோ தங்க நகையுடன் கடந்த மாதம்திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களை பின்தொடர்ந்த மர்மநபர்கள் இருங்களூர் என்ற இடத்தில் காரை மறித்து மிளகாய் பொடியை தூவி 10 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.