கும்பகோணம் தாராசுரம் பகுதியில் மழைநீர் தேங்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாகக் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தாராசுரம் சோலையப்பன் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 30 ஆயிரம் வாழை மரங்கள் மழைநீரில் மூழ்கி அழுகின.
வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததே விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.