38 பேர் உயிரிழந்த அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்யா தான் காரணம் என அதிபர் புதின் ஒப்புக் கொண்டுள்ளார்.
தஜிகிஸ்தான் நாட்டில் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவை, ரஷ்ய அதிபர் புதின் சந்தித்தார்.
அப்போது விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ஒப்புக்கொண்ட புதின், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர அஜர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே புதின் தற்போது வெளிப்படையாகத் தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.