காலை நேரத்தில் சோளா பூரி, கச்சோரி சாப்பிடுவதை தவிர்க்குமாறு இரைப்பை குடல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நவீன நாகரீக வாழ்க்கையில் மனிதர்களின் உணவுப் பழக்கமும் சிக்கலாக மாறியுள்ளது. எந்த நேரத்தில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற புரிதல் இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அத்துடன் காலை நேரத்தில் என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடக் கூடாது என்பதும் இன்றைய தலைமுறைகளுக்குத் தெரிவதில்லை.
இந்நிலையில் காலையில் மூன்று உணவுப் பொருட்களை எப்போதும் சாப்பிடக் கூடாது என எச்சரிக்கிறார், டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணர் மற்றும் கல்லீரல் நிபுணரான மருத்துவர் சுபம் வத்யா.
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதன் அமிலத்தன்மை குடற்பகுதியை எரிச்சல் அடைய செய்யும் என்கிறார் சுபம் வத்யா.
BLACK காபி குடிப்பது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆற்றல் குறைப்புக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.
சோளா பூரி, பாவ் பாஜி, கச்சோரி போன்ற உணவுகள் குடலில் எரிச்சல் மற்றும் நீண்டகால வீக்கம் ஏற்பட தூண்டுகிறது எனவும் எச்சரித்துள்ளார்.