ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்குத் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கும் எனச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.