விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்திற்கு பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த வரிக்கல் பகுதியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் தனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றக் கோரி கடந்த மாதம் 26ம் தேதி விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு அப்பகுதியில் வி.ஏ.ஓ-வாக பணியாற்றும் தேவராஜ், பட்டா பெயர் மாற்றப் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இது குறித்து கோகுல கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்ததை அடுத்து, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தேவராஜ் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகப் பிடித்தனர்.